ஒருமணி நேரமா கத்தீண்டு இருக்கேன், ஒரு பயல் ஏன் ன்னு பதில் சொல்லரதில்லை”

“கொழந்தைகள் எல்லாரும் வோட்டு போட போயிருக்கா”

“கொழந்தைகளுக்கு என்னடீ வோட்டு ?”

“நீங்கள் கூப்பிட்டா அப்பிடி சொல்ல சொன்னா”

“ஐயோ, ஓன்னை கெட்டிக்குண்டு அழறேனே!’

“பொய் சொல்லறேல், கெடிக்கொம் இல்லை, அழோம் இல்லை”

“எட்டும், பத்தும் வயசிலே வோட்டுக்கு போற பத்து மகான்களை, கெட்டிக்காமே எப்பிடி பெத்தே?”

“அப்பிடி எல்லாம் சொல்லாதுங்கோ நா! வெக்கமா இருக்கு”

“வேண்டாம் தாயீ, போல்ளிங் பூத்லே எடம் இருக்காது “

Advertisements